Skip to main content

Posts

Showing posts from December, 2014

பட்டாம்பூச்சிக் கதைகள்

நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை.. நிராகரிப்புகளால் என் இதயம் கிழிகிற போதெல்லாம் உன் நினைவென்னும் ஊசியால் நான் தைத்துக்கொண்ட என் கடந்த காலங்கள்..          

பட்டாம்பூச்சிக் கதைகள்

இன்றும்  அந்த நீலம்  மாறாமல்  என் இதயத்தில் தேக்கி   வைத்திருக்கிறேன். வா ஆளுக்கு ஒரு கோப்பை வானம் ஊற்றிக் குடிக்கலாம்.                  

பட்டாம்பூச்சிக் கதைகள்

அஷ்வந்த்ரா மழையாக இருக்ககூடும். ஆஷ்ரிதாவுக்கு குடையை விட மழை பிடித்திருக்க கூடும். எழுதாத சில வார்த்தைகளுக்குள் ஒரு வாழ்க்கை ஒளிந்திருக்கக் கூடும்.

பட்டாம்பூச்சிக் கதைகள்

அகாலத்துயரம்  துரத்தும் போதெல்லாம்  உன் நினைவென்னும்  மூச்சிழுத்து  நெடுந்தூரம்  ஓடுகிறேன்.

பட்டாம்பூச்சிக் கதைகள்

நீ  குடை பிடித்து  மழை மறுத்தால்  அது  மழைக்காலம் அல்ல.  குடைக்காலம்.

பட்டாம்பூச்சிக் கதைகள்

இலைகளை  இவள் மீது உதிர்த்து  இவள் சிலிர்ப்பில்  துளிர்க்கும்  வினோத மரங்கள்  நிறைந்தது காடு..!