திங்கள், 29 டிசம்பர், 2014

பட்டாம்பூச்சிக் கதைகள்






நீ அறிந்திருக்க
வாய்ப்பில்லை..
நிராகரிப்புகளால்
என் இதயம்
கிழிகிற போதெல்லாம்
உன் நினைவென்னும்

ஊசியால்

நான் தைத்துக்கொண்ட

என் கடந்த காலங்கள்..


         

பட்டாம்பூச்சிக் கதைகள்



இன்றும்  அந்த நீலம் 
மாறாமல் 
என் இதயத்தில்
தேக்கி  வைத்திருக்கிறேன்.
வா ஆளுக்கு
ஒரு கோப்பை வானம்

ஊற்றிக் குடிக்கலாம்.

                 

திங்கள், 22 டிசம்பர், 2014

பட்டாம்பூச்சிக் கதைகள்

சக மனிதனின் தோல்வியில் இருந்து நான் அடைந்த ஒன்றை என் வெற்றி என்று கொண்டாடினால் நான் மனிதனே அல்ல. 

பட்டாம்பூச்சிக் கதைகள்

அஷ்வந்த்ரா மழையாக
இருக்ககூடும்.
ஆஷ்ரிதாவுக்கு குடையை விட மழை
பிடித்திருக்க கூடும்.
எழுதாத சில வார்த்தைகளுக்குள்
ஒரு வாழ்க்கை

ஒளிந்திருக்கக் கூடும்.

வெள்ளி, 19 டிசம்பர், 2014

பட்டாம்பூச்சிக் கதைகள்


அகாலத்துயரம் 
துரத்தும் போதெல்லாம் 
உன் நினைவென்னும் 
மூச்சிழுத்து 
நெடுந்தூரம் ஓடுகிறேன்.


பட்டாம்பூச்சிக் கதைகள்


நீ 
குடை பிடித்து 
மழை மறுத்தால் 
அது 
மழைக்காலம் அல்ல. 
குடைக்காலம்.

பட்டாம்பூச்சிக் கதைகள்


இலைகளை 
இவள் மீது உதிர்த்து 
இவள் சிலிர்ப்பில் 
துளிர்க்கும் 
வினோத மரங்கள் 
நிறைந்தது காடு..!

பட்டாம்பூச்சிக் கதைகள்

எனக்கு மட்டும் தான் தெரியும்
நீ பூமிக்கு வந்த நாளில்
வானத்தில்
ஒரு நட்சத்திரம் தொலைந்த கதை





பட்டாம்பூச்சிக் கதைகள்

 மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் ....