வெள்ளி, 13 நவம்பர், 2020

பட்டாம்பூச்சிக் கதைகள்


 மூடியிருக்கும் கைகளுக்குள் இறுக்கத்தை தவிர வேறெதுவும் இல்லை. 


விரல்களை மடல் போல் மெல்லத் திறந்து பார்க்கிறேன். வந்தமரும்  வண்ணத்துப்பூச்சி நீயில்லை.


நவம்பர் மழையில் நனைந்து கொண்டே இருக்கிறது. நாளை பூக்குமென்று கனவுகள் காணுமென் காடு.


அதிகாலை குளிர் கிழித்து கதிர் ஊசிகள் தைக்கும் போது இதயம் உன்னை நினைத்து கொள்கிறது.


 அன்றாட வாழ்க்கையில் ஆயிரம் கேள்விகள். என்றேனும் வரக்கூடும் 

பதிலாக ஒரு பட்டாம்பூச்சி. 


அதிகாலை குளிர் அதிகரட்டி பேருந்து

படிக்கட்டில் நான் பின்னிருக்கையில் நீ

எண்ணங்கள் ஆயிரம். 


கண்ணதாசன் கைவிட்டான் பாரதி தீக்குளித்தான். ஷெல்லியும் ஷேக்ஸ்பியரும் செத்தே போனார்கள். 


தேன் கூட்டுக்குள் வண்ணத்துப்பூச்சி

நெரிசலான பேருந்துக்குள் 

நீ. 


தொற்றிக் கொண்டது தொல் காப்பியத்துக்கு முன்பு தொடங்கிய 

நம் தொல்லியல் காதல். 


☕☕☕

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் ....