மின்சாரம் தடைப்பட்ட இரவு
மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..!
தனிமையின் நரம்புகளால்
கட்டப்பட்ட மனசின் வீணையை
மீட்டிச்செல்கிறது
அவளது ஞாபகங்கள் .
சைப்ரஸ் மரங்களின் மூச்சென
மலைகளிலிருந்து எழும்பி
பள்ளத்தாக்கினை
இசையால் நிறைத்துச் செல்கிறது
ஆன்மாவின் காதல்.
நீலகிரி
மலை சிகரங்களில்
இயற்கையின் மொழியாய்
வியாபித்திருக்கிறது
அவளின் மௌனம்.
காட்டின்
அடர்ந்த தனிமையிலிருந்து
வெளியேறி
சிகரங்களைத் தழுவிச் செல்கிறது
ஒரு பறவையின் பாடல்
வண்ணத்துப்பூச்சியின் சிறகில்
எழுதிய கவிதையாக மாறி
காற்றில் தொற்றிக் கொள்கிறது
அவளின் தெய்வீகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக