Skip to main content

Posts

Showing posts from May 11, 2020

பட்டாம்பூச்சிக் கதைகள்

12:05:2012 Memories: நவம்பர் மழையில் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது அந்த ஓடை. வேரோடு வெள்ளத்தில் தத்தளிக்கும் செம்பருத்திச் செடியை சுமந்தபடி வேகமெடுக்கிறது, தன் அன்பு மகள்களுக்காய் ஆரஞ்சு மரக்கிளையில் ஆறுமுகம் அப்பா கட்டித்தந்த ஊஞ்சல்.  நீ, கவிதாவுக்கும், புவனாவுக்கும், சத்தியபாமாவுக்கும் பறித்துத்தர வேண்டுமென கருதி வைத்துக் காத்திருந்த, ஆரஞ்சு, கொய்யாப்பழங்கள் அனைத்தும் கண்ணீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்ட அதே நாளில்..  காட்டேரி ஆற்றங்கரையில் என் கால்கள் நீருரிஞ்சி மரத்தின் வேர்களாய் நின்றிருந்ததென நேற்றைய கனவு முடிந்தது.  உன் கால்களை சுமந்தபடி கம்பீரமாய் கிடந்த கரும்பாலம் என் காதலை சுமந்தபடி துருப்பிடித்து இற்றுப் போன இதயமென ஆற்றின் கரைகளில்  உடைந்து கிடக்கிறது.  எப்போதேனும் நீ ஜன்னல் திறக்கும் போது உன் பாதங்களை முத்தமிட  காத்திருக்கும் அதன் உதடுகளையும், குளிரில் நடுங்கியபடி நீ ஜன்னலை அடைக்கும் போது துருப்பிடித்து ஓட்டை விழுந்த அதன் கண்களுக்கு கீழே  இப்போது ஓடிக்கொண்டிருக்கும் கரும்பால ஓடையையும் பத்திரமாய் வைத்திருக்கிறேன்..  ஒரு கவிதையின் வடிவில்.😍