நீங்கள் எப்போது ஒரு திரைப்படம் இயக்கப்போகிறீர்கள்? நண்பர்கள் அடிக்கடி என்னிடம் கேட்கின்ற கேள்வி இது. " நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது". இது அனைவருக்குமான என் பதில். ஒரு திரைப்படத்தை இயக்க நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறதா? உண்மையில் என் பதில் போலியானது. எனக்கு ஒரு திரைப்படத்தை இயக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால் அது இப்போதைக்கு அவசியமற்றதாக தோன்றுகிறது . சிலசமயங்களில் நான் அதீதமான வெறுமையை உணர்கிறேன். அந்த வெறுமை என்னை ஒரு பள்ளத்தாக்கை நிறைக்கிற அமைதியாக்குகிறது எனக்கு தெரிந்ததெல்லாம், ஒரு மலையும் பள்ளத்தாக்கும் மட்டும் தான். பள்ளத்தாக்கின் குழந்தை நான் மலையை வியக்கிறேன். ஒரு போதும் நான் மலை உச்சியை சென்று பார்க்கப்போவதில்லை. என் இலக்கெல்லாம் என்னை நிறைக்கிற அந்த வெறுமையை சரியாக உணர்வதும் அதை உணர்த்துவதும் தான். அதற்குரிய திரைமொழியை நான் இயற்கையிடம் யாசிக்கிறேன். நான் ஒரு காட்டுவாசி. என் பள்ளத்தாக்கின் மீது உயர்ந்து நிற்கின்ற அந்த மலை தன்னிடமிருக்கிற காட்டை காண்பித்து என்னை நடுங்கச் செய்
TO MY PRINCESS