Skip to main content

Posts

Showing posts from 2015

பட்டாம்பூச்சிக் கதைகள்

வசீகரிக்கும் அழகோடு  கம்பீரமாக விரிந்து கிடக்கும்  அந்தக் காட்டுக்குள்  சுதந்திரமாக சுற்றித்திரியும்  ஒரு பட்டாம்பூச்சி  சிம்ம ராசியில் பிறந்திருக்கக்கூடும் .

பட்டாம்பூச்சிக் கதைகள்

தான் அமரும் இடமெல்லாம்  கொலுவிருக்கும் பட்டாம்பூச்சியும்  கொலு வைக்கக் கூடும்.

பட்டாம்பூச்சிக் கதைகள்

இனி எந்தக் கடவுளாலும் பிறிதொரு மனிதனாலும் தரவியலாப்   பின் மதியப் பொழுதொன்றில்.. பின்வாசல்   மழைவீதியில்   ஐந்தே நிமிடம் நடந்தேன் .. இல்லை.. "கடந்தேன்  கடந்தேன்   கடந்தேன்".. "சொல்லொன்றில் தீராப்   பொருள்கொண்ட   வாழ்வன்றோ வரம்" இவன்   காமம் துறந்த ராவணன்   ஆன கதையை   இனி அந்த ராமனுக்குச் சொல்..!

பட்டாம்பூச்சிக் கதைகள்

என் இனிய பட்டாம்பூச்சிக்கு:  நீ வந்து அமராமல்   என் பூக்கள் மணப்பதில்லை.                                           -இப்படிக்கு காடு.

பட்டாம்பூச்சிக் கதைகள்

ஒரு நவம்பர் மாதத்தின் முதல் நாளில் இங்கு தான் அழகான அந்த வெள்ளை நாய்க்குட்டி உன் பின்னால் வாலாட்டிக் கொண்டே வந்தது..! அன்று பழுத்த இலைகளை கண்களாக்கி நம்மைப் பார்த்துக்கொண்டிருந்த மரங்களை பத்திரமாய் வைத்திருக்கிறேன் நினைவுகளில். ஒவ்வொரு முறை கடக்கிறபோதும் வெள்ளை நாய்குட்டியாக மாறி வாலாட்டும் மனசை எங்கே ஒளித்து வைப்பது.

பட்டாம்பூச்சிக் கதைகள்

நமக்கேயான தனிமை  வாய்க்கும் போதெல்லாம்   நெருப்பை எரியவிட்டு   பனியடர்ந்த பள்ளத்தாக்கின்   குளிருக்குள்   பதுங்கிக் கொண்டோமல்லவா..!   அந்த ரகசியங்களை   கிளன்டேல் காடுகள்   பத்திரமாய் வைத்திருக்கிறது  இன்றும்..!

பட்டாம்பூச்சிக் கதைகள்

சுதேசிகளும் விதேசிகளும் பரதேசிகளும் அன்றாடம் வந்து போகும் உன்னைப்பற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன் சொன்ன விந்தையான கதைகளிலிருந்து துவங்கியிருக்க கூடும் இரயில்மொழி..   குக்கூ...   சிக்கு புக்கு... சிக்கு புக்கு...

பட்டாம்பூச்சிக் கதைகள்

சொல்ல நினைத்து  சொல்லாமல் இருந்த கதைகள்  நீராகவும்,  சொல்லி முடித்ததும்  உறைந்து நின்ற கதைகள்  பாறையாகவும், "இந்த ஆறு" அப்படியே தான் இருக்கிறது. சொல்லாமல் இருந்த கதைகள் உப்பாகவும் , சொல்லி முடித்த கதைகள் மணலாகவும் மாறும். இந்த ஆற்றில் தான், பண்டிகை முடிந்ததும் சாமியை கரைக்கும் சடங்கையும் செய்கிறோம். கதைகளை போலவே கடவுளும் கல்லில் உறைந்தும், நீரில் கரைந்தும்..

பட்டாம்பூச்சிக் கதைகள்

10:09:2015 நேற்று இரவெல்லாம்  குடகு மலையாக கிடந்தது உடல்.  மடிகேரியில் அலைந்து திரிந்த ஆன்மாவை,  அழுது புலம்பிய மேகங்களை,  குளிராய் தழுவிய காற்றின் கைகளை,  அதிகாலை பனித்துளிகளால்  ஆசிர்வதிக்கப்பட்ட மூங்கில் காடுகளை,  கண்ட பின்பும் என் காதல்  அந்த பாள்ளத்தாக்கில் தான் துயில்கிறது  என்று நம்புகிறாயா..!  அது நீ போகும் திசையெல்லாம்  ஒரு மெல்லிய இசையாகி  உன்னை வரவேற்பதை அறியாதவள் அல்ல நீ. 11:09:2015 வழக்கம் போல் எழுந்தவுடனே அவளை அழைத்தல்.. அவளோடோளாவுதல் என்றே துவங்கியது இந்தக் காலையும்..! "இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்   வல்லது அவர்அளிக்கு மாறு." - என்றேன்..! அப்படியா..! என்றாள் "ஆமாம்" என்றேன். "அதான் காலைலேயே வெயில் சுர்ருன்னு அடிக்குது"- என்றாள். "அன்னிக்கு மழை பெய்யுதுன்னு சொன்ன".- என்றேன். "அன்னிக்கு நீ வேறு குறள் சொன்னாய்" - என்றாள். "நம்ம ஊர்ல குறள் கேட்டா இதெல்லாம் நடக்குது&qu

பட்டாம்பூச்சிக் கதைகள்

எம் பெண்களின் விரல்களில் தேயிலை கறை படிந்திருந்தது, கொழுந்து கிள்ளலின் போது அழுந்திய நகக்கீறல்களில், தலைமுறைகளாய் விடியாத இரவுகளின் ஆன்மா அழுது கொண்டிருந்தது. அன்றாடம் சட்டை மாற்றி, சிலேட்டை எடுத்து புத்தகப்பைக்குள் திணிக்கையில் யாரேனும் புளிச்சான் கீரைக் கிழங்கோ, காக்காகரும்போ, பறித்து தருவார்கள் என்ற கனவும் இருந்து. “புட்டுவாத்தியார்” கடக்கையில், உர்ர்ரென்று இருந்த காடு, கண்ணாடி வாத்தியார் கடக்கையில் "க்ளுக்" கென்றும்,                                     பூபதி டீச்சர் கடக்கும் போது பணிவோடும் சிரித்தது. அன்ற ாடம் ஊருக்குள் வரும் அந்த மலை ரயில் ரன்னிமேட்டை கடக்கையில், தோளில் ஏந்திய, ப்ளம்ஸ், பேரி, கொய்யா, ஆரஞ்சு பழக்கூடைகளில் குவாட்டருக்கான தேவை இருந்தது. ரயில் புறப்படுகையில், ராகவன் தேநீர் தயாரிக்க தொடங்குவது சாக்கு கட்டும் அவசரத்தில் சாப்பிட மறந்தவர்களுக்கு ஆறுதலாய் இருந்தது. மனசுக்கு ஒவ்வாத மங்கையை அன்றாடம் புணர்வது போல் மழையும், கூடவே இருக்கும் கொலைகாரனின் அலட்சிய புன்னகை போல் குளிரும், பதுங்கு குழிக்குள் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்கிற அச்சம் போல் பனியும்,

பட்டாம்பூச்சிக் கதைகள்

உன்னோடு பரிமாற மட்டும் என்று ஒதுக்கி வைத்த வார்த்தைகளைத் தொலைத்து விட்டு  வனாந்தரத்தில் அலைகிறது மொழி  வெயிலில் கருகி  மணலில் புதையுண்ட வார்த்தைகளை மீட்டெடுக்க முடியாமல்  தவிக்கிறேன் நான்...!