Skip to main content

Posts

Showing posts from August 29, 2015

பட்டாம்பூச்சிக் கதைகள்

எம் பெண்களின் விரல்களில் தேயிலை கறை படிந்திருந்தது, கொழுந்து கிள்ளலின் போது அழுந்திய நகக்கீறல்களில், தலைமுறைகளாய் விடியாத இரவுகளின் ஆன்மா அழுது கொண்டிருந்தது. அன்றாடம் சட்டை மாற்றி, சிலேட்டை எடுத்து புத்தகப்பைக்குள் திணிக்கையில் யாரேனும் புளிச்சான் கீரைக் கிழங்கோ, காக்காகரும்போ, பறித்து தருவார்கள் என்ற கனவும் இருந்து. “புட்டுவாத்தியார்” கடக்கையில், உர்ர்ரென்று இருந்த காடு, கண்ணாடி வாத்தியார் கடக்கையில் "க்ளுக்" கென்றும்,                                     பூபதி டீச்சர் கடக்கும் போது பணிவோடும் சிரித்தது. அன்ற ாடம் ஊருக்குள் வரும் அந்த மலை ரயில் ரன்னிமேட்டை கடக்கையில், தோளில் ஏந்திய, ப்ளம்ஸ், பேரி, கொய்யா, ஆரஞ்சு பழக்கூடைகளில் குவாட்டருக்கான தேவை இருந்தது. ரயில் புறப்படுகையில், ராகவன் தேநீர் தயாரிக்க தொடங்குவது சாக்கு கட்டும் அவசரத்தில் சாப்பிட மறந்தவர்களுக்கு ஆறுதலாய் இருந்தது. மனசுக்கு ஒவ்வாத மங்கையை அன்றாடம் புணர்வது போல் மழையும், கூடவே இருக்கும் கொலைகாரனின் அலட்சிய புன்னகை போல் குளிரும், ...