எல்லோரும் ஏன் CHURCH க்கு போறாங்கனு தெரியாமலே நாள் தவறாம நான் CHURCH க்கு போகஆரம்பிச்சேன். இறக்கி விட யாருமே இல்லாத சிலுவையி ல் ரொம்ப காலமா தொங்கிட்டே இருந்தார் இயேசு சாமி. அவரோட வலி பத்தின எந்தக் கவலையும் இல்லாம, நந்தினியும், அமுதாவும் தினமும் சாமிகிட்ட ஒரு Dealing பேசிகிட்டிருந்தாங்க. சாமி பத்தின எந்த அக்கறையும் இல்லாம நான் மெழுகா உருகி, திரியா கருகிட்டு இருந்தேன். முள்கிரீடம், ஆணி, சிலுவை. எல்லாம் குறியீடுகளாய் மாறி இருந்தது.