Skip to main content

Posts

Showing posts from August 13, 2009

பட்டாம்பூச்சிக் கதைகள்

சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையின் ரேஸ் கோர்ஸ் ரோட்டில் இருக்கும் எங்கள் வழக்கமான குட்டி சுவற்றில் நண்பர்களோடு சிகரெட்டும் சிரிப்புமாக இருந்த ஒரு மாலைப்பொழுதில் அலெக்ஸ் லாரன்சிடம் இருந்து அழைப்பு வந்தது. அது, ஊட்டி ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட என் பள்ளி ஆசிரியர் பீட்டரின் மரணச் செய்தி. மிக துயரமான செய்தி அது. அன்று இரவு ரம்பா பாருக்கு சென்று நிறைய குடித்தேன், சுப்பு மெஸ்ஸில் இருக்கும் சப்ளையரோடு வாய்த்தகராறு முற்றி அவரை ஆத்திரத்தில் தாறுமாறாக போட்டு உதைத்தேன். நண்பர ்கள் சண்டையை நிறுத்தி என்னை சமாதனாம் செய்து கல்லூரி விடுதியில் ஒரு அறையில் போட்டு அடைத்தனர். பெரும் கூச்சலுக்கு பிறகு ஒரு காகிதமும் பேனாவும் கொடுத்துவிட்டு ஏதாவது எழுதுங்கண்ணா மனசு கொஞ்சம் ப்ரீ ஆயிடும் என்று ராஜசேகர் சொல்ல.. ஒரு பாக்கெட் சிகரெட் வேண்டும் என்றேன்.. தரப்பட்டது. இன்னும் கொஞ்சம் காகிதங்கள் வேண்டும் என்றேன். அதையும் கொண்டு தந்து விட்டு அண்ணா பக்கத்துக்கு ரூம்ல தான் இருக்கேன் ஏதாவது வேணும்னா கூப்பிடுங்கண்ணா என்று சொல்லிவிட்டு அறைக்கதவு தாழிடப்பட்டது. ஏதேதோ எழுதுகிறேன்.. என்னை அறியாமல் மெல்ல உறங்கிப