Skip to main content

Posts

Showing posts from August 4, 2009

பட்டாம்பூச்சிக் கதைகள்

வாழ்வின் அவசரம் முகத்திலறைய முதுகில் அறையும் வெயிலின் கரங்களை சபித்துக்கொண்டே நடந்தேன் மாநகர வீதியில் நகரத்தெருக்களில் நடந்து களைப்புற்று ஒதுங்கினேன் பயணிகள் நிழற்குடையில் "மச்சான்" என்ற குரலில் அதிர்ந்து நிமிர்ந்தேன் கல்லூரி வாழ்வில் பழகிப்பிரிந்த குட்டிசுவர்வாசிகளில் ஒருவன் எப்பிடிடா இருக்க உன் ஆளு எப்படி இருக்கா என்ன பண்ற நீ எங்க இருக்க..... அவன் கேட்டுக்கொண்டே இருக்கையில் பதில்களேதுமற்ற நான் மீண்டும் ஒரு உபயோகமற்ற பொழுதில் உன்னை சந்திக்கிறேன் என்று எதிரில் வந்த பேருந்தில் அவசரமாய் ஏறித் தொலைத்தேன் அவன் நட்பை...

பட்டாம்பூச்சிக் கதைகள்

ஈரப்படுத்தப்பட்ட கனவின் வெள்ளை துணிக்குள் கொஞ்சம் விதைகளை வைத்திருக்கிறேன் நடவின் பாடல்களைப்பாடிக்கொண்டு அறுவடை நாட்களை கனவு காண்கிறேன் நிலம் இறுகி பாறையாகிக்கொண்டிருக்கிறது..