நூறு ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் ஊருக்குள் வருவதும் போவதுமாய் இருக்கிறது இந்த புகைவண்டி. பால்யங்களில் என் அம்மா எனக்கு ஊட்டியது ரயில் சோறு தான். ஊட்டி ரெயில் என்று சொல்வார்களே..! - "சோறூட்டி ஓடும் ரெயில்" இப்போதும் எங்கள் ஊரில் எல்லா குழந்தைகளுக்கும் இந்த புகைவண்டியைக் காட்டித்தான் சோறு ஊட்டுகிறார்கள் 15 வயது வரை இந்த ரயிலை கையசைத்து வழியனுப்பி இருக்கிறேன்.. ஒவ்வொரு முறையும் குறைந்தது முப்பது கைகளையாவது பதிலுக்கு அசைக்காமல் கடந்ததில்லை இந்த புகைவண்டி.. அன்றாடம் எங்கள் குழந்தைகளை மகிழ்விக்கும் பொம்மையாக வந்து போகும் இந்த புகைவண்டியை, விஞ்ஞானக்கண் கொண்டு கண்டதில்லை இதுவரையில்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட குதுகலமாய் கையசைக்கும் ஒரு குழ்ந்தையாய் என்னை மாற்றிவிட்டுப் போன இந்த புகைவண்டி "ஆய்ய்.. ட்ரைன்நு" என்று அப்போது என்னை உள்ளுக்குள் சொல்ல வைத்ததில் வியப்பொன்றும் இல்லை. தினந்தோறும் ஊருக்குள் வந்து போகும் பால்காரனைப் போல இயல்பாய் வருவதும் போவதுமாய் இருக்கிறது இந்த தீவண்டி. எப்போதும் தாமதமாகவே வரும் ஒன்றாம் வகுப்பு கண்ணாடி வாத்தியாருக்கும், காலை பத
TO MY PRINCESS
Comments
Post a Comment