பட்டாம்பூச்சிக் கதைகள்

அமெரிக்கா போக வேண்டும்
உன் ஆசை நீ சொல்ல

அலபாட்ரா சிறகு
கடன் வாங்கி வானத்தில்
தூங்க வேண்டும் 

என் ஆசை நான் சொன்னேன்.

நம்மை நனைக்க
தயாரானது மழை.

இருவரும் கட்டிக்கொண்டு
ஒருவருக்கொருவர் குடையானோம்.

துணைக்கு ஆளின்றி
தனியே நனைந்தது மழை





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்