அந்நாளில் என் இதயம் ஆஸ்பென் மலைச்சிகரத்தில் இருந்தது
பால்வெளியில் உருகிய லாவா எனக்கென குளிர்ந்து பனித்துளியாகி நண்பகல் மென் சூட்டில் நாசிவழி ஆவியாகி ஆதியில் என்னுள் நுழைந்தவள் நீ.
ஆஸ்பென் ஸ்நோமாஸ் பள்ளத்தாக்கிலிருந்து பனிச் சிகரங்களை நோக்கி நடக்கும் பால்நிறப் பிள்ளைகளின் ஒளிரும் கண்களில்.
பனிச்சறுக்கில் துள்ளிக் குதித்தோடும் குதூகலங்களில் துளிர்க்கிறது உன் ஞாபகங்கள்
எனக்கு மட்டும் தான் தெரியும் நீ பூமிக்கு வந்த நாளில் வானத்தில் ஒரு நட்சத்திரம் தொலைந்த கதை.
Comments
Post a Comment