பள்ளத்தாக்கெங்கும்
அடர்ந்தமௌனம்
அருகிலேங்கோ
அத்திமரம் பூத்திருக்கலாம்
கிழக்கின்மேகம் கருத்திருந்தது
அதிகாலைக்குபின்னும்
வெகுநேரம்
புல்லை புணர்ந்து கிடந்தது பனி
பழத்தோட்டத்தின் சுகந்தம் காற்றில்
எறும்புகள் அறிந்திருந்தன
மழைக்காலத்தின்
ஆரம்பநாள் அதுவென்று
எனக்கு நம்பிக்கை இருந்தது
நாளை மழைஈசல்களை சந்திப்பேனென்று
அதற்குள்
நான் அவளை
சந்தித்தாக வேண்டும்
அந்நேரம்
பிரபஞ்சமெங்கும்
கைகளை அசைக்கிறாள் நந்தினி
எல்லைஇல்லாப் பெருவெளியில்
சிறகுகளின்றி பறக்கின்றேன் நான்..
நந்தினி என்பது பிந்தைய திருத்தல் குறிப்பு 📓💌📒. முந்தைய நாற்பதிலும் பிந்தைய நாற்பதிலும், எந்தையின், தந்தையின் சந்தையில் கூட இதை திருத்த இயலாது. மானுட மா இது மந்தை க்கு மந்திரி யார்??
ReplyDelete