பட்டாம்பூச்சிக் கதைகள்
அது காதல் என்னை பெருங்கருணையோடு ஆசிர்வதித்திருந்த காலம்.
செல்மாகராமியின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு குன்னூர் புனித அந்தோனியார் தேவாலயத்தில், வாழும் ஜிப்ரான் போல் வேண்டிக் கொண்டே இருந்தேன்.
அந்த நாட்களில் தான் நந்தினி மீது விவரிக்கவே இயலாத ஆன்ம நட்பு வளர்ந்திருந்தது. அந்த நாட்களின் அனுபவ குறிப்புகள் தான் பட்டாம்பூச்சிக் கதைகள் ஆனது.
ஜூனியர் விகடனில் "காதல் படிக்கட்டுகள்" தொடராக வெளிவந்த போது எழுத்தின் மீதும் புத்தகங்கள் மீதும் இலக்கியத்தின் மீதும் அளவற்ற காதலுடன் இருந்தேன்.
இப்போதும் மனதில் சாலமன் பாப்பையாவின் வரிகள் சலசலத்து ஓடிக்கொண்டே இருக்கிறது.
"பெருமழை பெய்யறப்போ மழைத்தண்ணி ஓஓ ன்னு அடிச்சுப் பொரண்டு பொறப்பட்டு வருமே, வழியில கிடக்குற அத்தனையும் அள்ளிக்கிட்டு உற்சாகமா கலங்கடிச்சுகிட்டு வருமே அது சின்ன வயசுச் சேட்டைக மாதிரி. அதுக்கு நிதானம் தெரியாது.
ஆனா, மழை வடிஞ்ச மறு நாளு அதே ஓடை கண்ணாடியைக் கரைச்சு ஊத்துன மாதிரி மெள்ள சலசலக்கும் பாருங்க அந்த நல்ல தண்ணி நடந்து வர்ற அழகு மாதிரி இருக்கணும்யா வாழ்க்கை!"
கருத்துகள்
கருத்துரையிடுக